2025 மே 14, புதன்கிழமை

மிலேனியம் சிட்டி வழக்கு; செப்டெம்பர் விசாரணை

Gavitha   / 2015 ஜூலை 14 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய மிலேனியம் சிட்டி வீடமைப்பு தொகுதியில் பாதுகாப்பு வீட்டில் தங்கியிருந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் தகவல்களை வெளிப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் உதவி பொலிஸ் அதிகாரி குலசிறி உடுகம்பொலவுக்கு எதிரான வழக்கை செப்டெம்பர் மாதம் முதல் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன், நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கின் பிரதிவாதிகளான 10 பேரையும்  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மற்றும் செப்டெம்பர் 3ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கொழும்பு, அத்துருகிரிய, கண்டி மற்றும் கட்டுகஸ் தோட்டையில் ஸ்ரீ லங்கா படையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை சேமித்தார் என்றும் அந்த வீடமைப்பு தொகுதியை சுற்றிவளைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .