2025 மே 15, வியாழக்கிழமை

நீதியரசர் ஆப்றூவின் மனு இன்று விசாரணை

Kanagaraj   / 2015 ஜூலை 07 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பணிப்பெண் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூ, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த மனு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க, உபாலி அபேரத்ன மற்றும் அனில் குணரத்ன ஆகியோர் முன்னிலையிலேயே நீதியரசர் ஆப்றூவின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேற்படி பணிப்பெண் மீது, நீதியரசர் ஆப்றூ தாக்குதல் நடத்தினார் என்று கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் சரணடைந்த நீதியரசர் ஆப்றூவை, பிணையில் செய்ய கல்கிஸை நீதவான் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .