2025 மே 14, புதன்கிழமை

குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வாகனம் செலுத்திய பெண் கைது

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே போக்குவரத்து பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்ணையும் அவரது கணவரையும், கடுவல பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த பெண் தனது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்றதை கண்டித்த போக்குவரத்து பொலிஸாரை, குறித்த பெண் அச்சுறுத்தியுள்ளார். 

பொலிஸாரை பயமுறுத்தி அவர்களை திட்டித்தீர்த்த 38 வயதுடைய பெண்ணின் காணொலி முகநூலில் நேற்று முன்தினம் பரபரப்பாக பகிரப்பட்டு வந்தது.
 
குறித்த பெண், பொலிஸாரிடம் இருந்த தண்டப்பத்திர புத்தகத்தை கிழித்தது மாத்திரமல்லாது, பொலிஸாரின் தலைக்கவசத்தையும் எடுத்துக்கொண்டு சென்றதன் காரணத்தினாலேயே அவரை கைது செய்யததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மனைவி கொண்டு வந்திருந்த தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டு கடுவல பொலிஸ் நிலையத்துக்கு சென்ற கணவர், தனது மனைவி மனநோயாளி என்று கூறியுள்ளார். 

தனது மனைவி மனநோயாளி என்று தெரிந்துகொண்டு வாகனத்தை ஓட்டுவற்கு இடமளிக்க  காரணத்தினால், பெண்ணின் கணவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .