2025 மே 14, புதன்கிழமை

பல் கழற்றிய வைத்தியருக்கு பிணை

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா வைத்திய சபையின் அனுமதியின்ற கொஹூவளை தனியார் வைத்தியசாலையில் பல் வைத்தியராக கடமையாற்றிய பெண் வைத்தியர் என்று கூறப்படுகின்ற மானிப்பாய் முகமலை சிவபதம் (ஆனந்தி ராதாகிருஷ்ணன்) 25ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவிக்குமாறு நுகேகொடை நீதவான கனிஷ்க்க விஜயசிங்கவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர், இரத்தினபுரியில் உள்ள வைத்தியர் ஒருவரின் பதிவிலகத்தில் கீழ் ஆனந்தி ராதாகிருஷ்ணன் என்ற போலியான பெயரில் கடமையாற்றியுள்ளார் என்று பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அவருடைய வெளிநாட்டு கடவுச்சீட்டை தடைசெய்த நீதிமன்றம், அவர், தொடர்ந்து வைத்திய தொழிலில் ஈடுபட்டால் பிணையை இரத்துசெய்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .