Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 16 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ஆணைக்குழுவுக்கு 820 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் அவற்றில் 115 முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
சுமார் 60 முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்த விசேட பொலிஸ் பிரிவின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
2010ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடந்தவை தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
5 பேர் கொண்டு ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியங்கள் விசாரிக்கப்பட உள்ளதுடன் இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மார்ச் மாதம் நியமித்தார்.
ஆணைக்குழுவில் பிரிதி சூரியசேன, அமிந்த சேனவிரத்ன, விக்கும் களுஆராச்சி, கியான் குலதுங்க, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் பி.ஏ. பிரேமதிலக்க ஆகியோர் உள்ளடங்களியுள்ளனர்.
பாரதூரமான ஊழல், மோசடிகள், அரச சொத்துக்கள், அரச பலம் மற்றும் அரச அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக ஆணைக்குழு விசாரணை நடத்தும் என அதன் செயலாளர் எல். சில்வா தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago