Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூலை 16 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
விலங்குளின் நலன்கருதி, யால தேசிய பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் அலைபேசி வலையமைப்புகள் துண்டிக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.டி ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜூலை 20ஆம் திகதி முதல் ஒருவார காலத்துக்கு அலைபேசி வலையமைப்பு துண்டிப்பு அமுலிலருக்கு மென அவர் தெரிவித்தார்.
சில பார்வையாளர்களின் நடவடிக்கைகள் வன விலங்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலேயே இந்த திட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்பதை திணைக்களம் தீர்மானிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வேகமாக வாகனத்தை செலுத்தும் சில பார்வையாளர்கள், அலைபேசிகளில் குறுஞ்செய்திகளை அனுப்பியவண்ணம் வாகனம் செலுத்துகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துக்களால் அரியவகை விலங்குகளும் கொல்லப்படுகின்றன.
காலை 6மணிமுதல் 9 மணிவரையும் மாலை 3மணிமுதல் 6மணிவரையும் அலைபேசி வலையமைப்புக்கள் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவித்த பணிப்பாளர் நாயகம், இத்திட்டத்துக்கு பார்வையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago