Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 17 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு லிற்றோ நிறுவனத்துக்கு தடை விதிக்குமாறு கோரி, பொதுமகன் ஒருவரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை (16) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரான ஏ.என்.என்.தர்மபிரிய என்ற மேற்படி பொதுமகன், தனது வழக்கில், லிற்றோ காஸ் லங்காலி மிடெட், லிற்றோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவேட் லிமிடெட், துறைமுக பொறுப்பதிகாரி கெப்டன் ஆர்.ஏ.ஜயவிக்ரம, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மின் வலு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மெட்ரிக்தொன் எரிவாயுவை 90 அமெரிக்க டொலர் செலவில் எடுத்து வர முடியும் போது, இந்த நிறுவனங்கள் மெட்ரிக்தொன்னுக்கு 116 அமெரிக்க டொலர்களை செலவளிக்கின்றன. மக்களின் பணம் இவ்வாறு தேவையில்லாத வகையில் செலவளிக்கப்படுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.
ஈரானின் கலா எனும் பெற்றோலிய கம்பனியிடம் பெற்றோலியத்தை கொள்வனவு செய்யும் டுபாய், அபுதாபியிலுள்ள பிரிமக்ஸ் கம்பனியிலிருந்து பிரதிவாதி நிறவனங்கள் எரிவாயுவை கொள்வனவு செய்கின்றன. ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா என்பன வர்த்தக தடைகள் விதித்துள்ள ஈரானிய எரிவாயுவை, மறைமுகமாக கொள்வனவு செய்வது இலங்கையை ஆபத்தில் மாட்டிவிடக்கூடும்.
20 வருட காலயுத்தத்திலிருந்து மீண்டு, சர்வதேச அமைப்பில் அங்கிகாரத்தையும் மதிப்பையும் இலங்கை பெற்றுவரும் இந்தவேளையில், கறுப்புப்பட்டியலிலுள்ள கம்பனிகளிடம் வர்த்தகம் செய்வது இலங்கைக்கு பல வழிகளிலும் கெடுதியானது என தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு லிற்றோ கம்பனிக்கு தடையுத்தரவு பிறப்பிக்கவேண்டுமென கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
39 minute ago
41 minute ago