2025 மே 14, புதன்கிழமை

வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கப்படவில்லை: சுமங்கல தேரர்

Princiya Dixci   / 2015 ஜூலை 17 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மல்வத்தை மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை நேற்று வியாழக்கிழமை (16) சந்தித்து ஆசி பெற்ற மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, 'கடந்த ஆறு மாதங்களாக இந்த நாட்டில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை' என்று குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்த மகாநாயக்க தேரர், 'வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கவில்லை என்பதே உண்மை' என்றார். 

'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையங்களை தவிர்த்து, வேறு அபிவிருத்திப் பணிகளில் கவனம் செலுத்தியிருந்திருக்க வேண்டும்' என்றும் தேரர் குறிப்பிட்டார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த தேரர், 'கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கிராமங்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. அதனாலேயே பொதுமக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். கை சின்னத்தைத் தவிர்த்து ஏனைய கட்சிகளுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும், அக்கட்சியின் கொள்கைகள் மாற்றப்படுகின்றன' என்றார். 

'இதனால், சு.க தலைமையிலான கூட்டமைப்பினால் பொதுமக்களுக்கு தேவையான சேவை வழங்க முடியாமல் உள்ளது. எல்லா சந்தர்ப்பங்களிலும், சு.க தனது கை சின்னத்தில் மாத்திரம் போட்டியிட்டிருக்கலாம். அதிகாரம் கிடைத்தவுடன் கிராமத்தை மறந்துவிடும் பலர், மீண்டும் தேர்தல் நெருங்கும்போதே கிராமத்தை நாடி மீண்டும் வருகிறார்கள். கிராமத்துக்கும் மக்களுக்கும் சேவையாற்ற அதிகாரம் தேவையில்லை. சஜித் பிரேமதாச, கடந்த காலங்களில் அவ்வாறே சேவையாற்றினார்' என்றும் சுமங்கல தேரர் மேலும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .