2025 மே 14, புதன்கிழமை

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை மாற்ற அனுமதி

Kanagaraj   / 2015 ஜூலை 17 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டுள்ள எவன்காட் நிறுவனத்துக்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை வேறு கப்பலுக்கு மாற்றுவதற்கு காலி பிரதான நீதவான் நிலுபூலி லங்காபுர, அந்த கப்பலுக்கு சொந்தமான சிலோன் ஜிப்பின் நிறுவனத்துக்கு அனுமதியளித்தார்.

இந்த ஆயுத களஞ்சியசாலை இருக்கின்ற 'மஹநுவர' என்ற கப்பலின் காப்புறுதி காலம் நிறைவடைந்துள்ளது என்பதனாலும் அந்தக்கப்பல் மிகவும் பழையது என்பதனாலும் ஏதாவது ஆபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அவ்வாறு ஆபத்து ஏற்படுமாயின் பாரிய சேதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருகின்றது. 

ஆகையினால், அந்த களஞ்சியசாலையை 'மஹாவலி' என்ற வேறு கப்பலுக்கு மாற்றுவதற்கு இடமளிக்குமாறு அந்த நிறுவனம், நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .