2025 மே 14, புதன்கிழமை

மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்குமாறு உயர்நீதிமன்றில் மனு

Kanagaraj   / 2015 ஜூலை 17 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நவ சமசமாஜக் கட்சி சார்பில் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி சேனக பெரேராவே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது என்றும் அவர், தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தல் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட வரப்பிரசாதத்தினால் ஏனைய வேட்பாளர்கள் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின்( ஜே.வி.பி) வேட்பாளர் சுனில் வட்டகலவும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .