Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kanagaraj / 2015 ஜூலை 18 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
1. மூன்று வயது குழந்தை பலி
பிபில-அம்பாறை வீதியில் 4ஆம் மைல்கல்லுக்கு அருகில் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் வீதியை கடந்துசென்ற பிபில, லிதகும்புரவைச் சேர்ந்த 3 வயதான கிரான் மனிஷா சத்சர என்ற மூன்றுவயது குழந்தையின் மீது அவ்வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த சிறுமி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2. விபத்தில் இளைஞன் பலி
ஹொரனை-மீபே வீதியில் கொடபரஹஸ் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் உடமுல்லஹேன பிடிகலவைச்சேர்ந்த 25 வயதான நிவங்க சம்பத் மரணமடைந்துள்ளார்.
ஹொரனையிலிருந்து பாதுக்கையை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸூடன் அதற்கு எதிர்புறமாக பயணித்த மோட்டார் சைக்கிள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 17.10க்கு மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியே பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தனியார் பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3. வவுனியா விபத்தில் பெண் பலி
வவுனியா- பம்மைமடு வீதியில் கல்வழி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியானதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பம்பைமடுவிலிருந்து கிடாவூர் பிரதேசத்துக்கு பயணித்துகொண்டிருந்த வானும்; அதற்கு எதிர்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுமே நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.20க்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், முச்சக்கரவண்டியில் பணித்த பெண்கள் மூவர், ஆண்கள் நால்வரும் படுகாயமடைந்துள்ளனர். அதில், வவுனியா, நெலுக்குளத்தைச் சேர்ந்த 50 வயதான இந்திரகுமார் இரத்னகுமாரி என்ற பெண்ணே மரணமடைந்துள்ளார்.
விபத்தையடுத்து வான் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
4. விபத்தில் ஒருவர் பலி
தம்புள்ள- கெகிராவ வீதியின் 80ஆவது கிலோமீற்றர் கல்லுக்கு அருகே நேற்று வெள்ளிக்கிழமை(17) மாலை 5.50க்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டிக்கு எதிர்திசையில் வந்த சைக்கிள் மோதியதில் பயணித்த கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (வயது 43) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த குறித்தநபர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதியை கைதுசெய்துள்ளதுடன் முச்சக்கரவண்டியையும் தடுத்துவைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
05. யானைத்ததந்தங்கள் வைத்திருந்தவர்களுக்கு விளக்கமறியல்
அனுமதிப்பத்திரமின்றி யானைத்தந்தங்கள் இரண்டை வைத்திருந்த 25மற்றும் 34 வயதான இருசந்தேக நபர்களை 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் மாவட்டத்தின் கல்லடி மற்றும் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்லடி பிரதேசத்தில் வைத்து நேற்று(17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை புத்தளம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் இருவரையும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
06.ஹெரோய்னுடன் ஐவர் கைது
30 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்த இரண்டு பெண்கள் உட்பட 5 சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை 17ஆம் திகதி மாலை 4 மணிக்கும் இரவு 10.30க்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம, கிராண்ட்பாஸ், வெலிக்கட மற்றும் சபுகஸ்கந்த பிரதேசங்களைச்சேர்ந்த சந்தேகநபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சகபத்துவன்ன பிரதேசத்தில் 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன் 31வயதான வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை நேற்று(17) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரை மாத்தறை நீதவான் முன்னிலையில் இன்று(18) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸ்
2 கிராம் 380 மில்லிகிராம் ஹெரோய்னை வைத்திருந்த கொழும்பு-14 கிராண்ட்பாஸ் 75ஆவது தோட்டத்தைச் சேர்ந்த 50வயதுடைய பெண்ணொருவரை நேற்று(17) மாலை 7.40க்கு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை இன்று (18) மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
வெலிக்கட
வெலிக்கட பொலிஸ்; பிரிவுக்குட்பட்ட அருணோதய மாவத்தை பிரதேசத்தில் 10 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோய்னுடன் 22வயதான ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரொருவரை நேற்று வெள்ளிக்கிழமை(17) இரவு 10.30மணிக்கு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிக்கட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரை அளுத்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சபுகஸ்கந்த
சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாரகட பிரதேசத்தில் 05 கிராம் ஹெரோய்னுடன் 28 வயதான சந்தேக நபரொருவரையும் கல்வல சந்தி பகுதியில் வைத்து 03 கிராம் ஹெரோய்னுடன் 26 வயதான சந்தேக நபரொருவரையும் நேற்று வெள்ளிக்கிழமை(17) இரவு 8மணிக்கு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு-10 மற்றும் கடவத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சபுகஸ்கந்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மஹர நீதவான் முன்னிலையில், இன்று(18) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
07. குளத்தில் மூழ்கி குழந்தை பலி
செவனகல வடக்கு பிரதேசத்தில், வீட்டுக்கு அண்மையிலுள்ள குளத்தினுள் விழுந்து இரண்டரை வயதுடை மிகுண அஞ்சான் மதுமாலா என்றற ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குழந்தை ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம், எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இன்று(18) பிரேத பரிசோதனை நடைபெறுமெனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
32 minute ago
40 minute ago
51 minute ago