2025 மே 14, புதன்கிழமை

முதலமைச்சரின் வாகனத்தில் கஞ்சா?

George   / 2015 ஜூலை 18 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண முதலமைச்சருக்கு மாகாணசபையால் வழங்கப்பட்ட வாகனத்தில் இருந்து சுமார் மூன்று கிலோகிராம் கஞ்சா போதைபொருள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலால் திணைக்கள அதிகாரிகள் ஊடாக சனிக்கிழமை(18) முற்பகல் அத்தனகொடை வீதியில் கஞ்சாவுடன் குறித்த வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டு பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சாரதி மாகாணசபை ஊழியர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .