2025 மே 14, புதன்கிழமை

சிறுமி உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 19 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தையின் முச்சக்கரவண்டியின் பயணித்துக்கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து பஸ்ஸில் மோதி உயிரிழந்த சம்பவம் ஹங்வெல்ல, தித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹங்வெல்ல, பஹட்கம பதுவத்த என்ற பிரதேசத்தைச் சேர்ந்த துஷினினி காவிந்யா சத்சரனி என்ற 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி, தனது தந்தையின் முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். தந்தை முச்சக்கரவண்டி செலுத்தினர் என்பதால், சிறுமி மாத்திரமே பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றுள்ளார். ஹங்வெல்ல, தித்தெனிய பிரதான வீதியில் வைத்து, முச்சக்கரவண்டிக்குள் இருந்த சிறுமி தவறி வீதியில் விழுந்துள்ளார்.

இதன்போது, முச்சக்கரவண்டிக்கு பின்பக்கமாக வந்த பஸ்ஸில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .