2025 மே 14, புதன்கிழமை

மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்க மஹிந்த மறுப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 17 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பைக் குறைப்பதற்கு பணிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளார்.

இம்முறை இடம்பெறவுள்ள தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி போட்டியிடுகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்காக வழங்கப்படும் பாதுகாப்புக் குறைப்பட வேண்டுமென, ஐ.தே.க வேட்பாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டிருந்தார்.

குறித்த விடயத்தைத் தனது கவனத்தின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சருக்கு இருக்கின்ற உரிமையை மதிப்பதாகத் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், குறித்த வேட்பாளருக்கு (மஹிந்த ராஜபக்ஷ) நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடாமல் தங்களது கடமைகளைச் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால், அது குறித்து ஆராய முடியுமெனவும், இல்லாதுவிடின் எந்தவொரு வேட்பாளரின் பாதுகாப்பையும் குறைப்பதற்கு தன்னால் உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர், தேர்தலில் போட்டியிடுகின்றன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதுகாப்பை விலக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், சபாநாயகர், அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் போன்றோர், குறிப்பிட்ட சில சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பாதுகாப்பு போன்ற குறிப்பிட்ட வசதிகளுக்கு உரித்தானவர்கள் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .