2025 மே 14, புதன்கிழமை

'மஹிந்தவின் குடியியலுரிமையை பறிக்க முடியும்'

Princiya Dixci   / 2015 ஜூலை 20 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பிரதம வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக இருந்த காலத்தில் சுனாமி அனர்த்ததினால் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும் போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரது குடியியல் உரிமையை பறிக்க முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்தது. 

குருநாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பி.யின் தலைவரும் வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டபோது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னெடுக்கப்படும் விசாரணையின் பின்னர் மஹிந்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரது குடியியல் உரிமை பறிக்கப்படும் என்று கூறியதாக' கூறினார். 

இதேவேளை, கிரிபத்கொடையில் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அநுர குமார திஸாநாயக்க, 'மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுளையைப்போல இரண்டு வருடங்கள் இருந்தபோதும், ஜோதிடரை பிடித்துகொண்டு தேர்தலை நடத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்துவிட்டு தற்போது நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முயற்சிக்கின்றார்' என்றார். 

'ஜனாதிபதி பதவி கைநழுவி போனவுடன் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்றார். ராஜபக்ஷகர்களிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்ற வேண்டும். அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரும் கஷ்டங்களுக்கு மத்தியிலும் முயற்சிக்கின்றார்' என்றார்.

'மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாக்கவேண்டுமாயின்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வாக்களிக்கவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .