Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 ஜூலை 22 , மு.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் விமல் வீரவன்ச தெரிவிக்கையில்,
போலி இலக்கத் தகடுகள் பொறுத்தப்பட்ட வெள்ளை வான் மற்றும் சந்தேகநபர்கள் நால்வருடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு சொந்தமான கைத்துப்பாக்கியொன்றை மிரிஹான பொலிஸார் கைப்பற்றியுள்ளதை அடுத்து, இது தொடர்பான சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது எனவும் வீரவன்ச குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் வசித்து வரும் மிரிஹான பிரதேசத்திலிருந்து மேற்படி வெள்ளை வான் கைப்பற்றப்பட்டமையும் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என விமல் வீரவன்ச மேலும் கூறினார்.
ஜி.எல். பீரிஸ் கருத்து
இதுதொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளதாவது,
'முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் வசிக்கும் மிரிஹான பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான போலி இலக்கமுடைய வெள்ளை வானொன்றை மிரிஹான பொலிஸார், திங்கட்கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்துள்ளது' என்றார்.
சந்தேகத்திற்கிடமான ஆயுதங்களுடன் நபர்கள் இவ் வானில் இருந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
விசேடமாக இதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருத முடியும்.
அதற்கமைய அவர்களின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடமும், பாதுகாப்பு செயலாளரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன், முன்னாள் ஜனாதிபதிக்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago