2025 மே 14, புதன்கிழமை

நாம் ஏற்கெனவே எச்சரித்தோம்: பீ.பீ.எஸ்

Kanagaraj   / 2015 ஜூலை 22 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இலங்கையர்களும் தொடர்புபட்டிருக்கக்கூடும் என தாங்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாக, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய பொது பல சேனா அமைப்பு கூறியது. 

தங்களுடைய எச்சரிக்கையை பாதுகாப்பு தரப்பினரோ அல்லது அரசாங்கமோ கவனத்திற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டிய பொது பல சேனாவின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் டிலந்த விதானகே, தங்களது கூற்று இன்று உறுதியாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பில் மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 'ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருப்பதானது, நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது' எனக் கூறியது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .