Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kanagaraj / 2015 ஜூலை 22 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் சுற்றுலா அணிக்கும் இடையில் இன்று 22 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நான்காவது நாள் போட்டியையொட்டி, கொழும்பு, கெத்தாராம ஆர். பிரேமதாஸ மைதானத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பார்வையாளர் அரங்கை சுற்றி பாதுகாப்பு வலைகள் போட்டு மூடப்பட்டுள்ளன என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்தே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 19ஆம் திகதி இடம்பெற்ற மூன்றாவது போட்டியின் போது மைதானத்துக்கு வெளியே இருந்த குழுவினர் வீசிய கற்கள், மைதானத்துக்குள் விழுந்ததையடுத்து பார்வையாளர்
அரங்கிலிருந்த இரு குழுக்களுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டன. அவ்வாறான மோதல்களை தவிர்க்கும் வகையிலேயே வலை போடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மைதானத்தில் நடைபெறுகின்ற அடுத்தடுத் போட்டிகளின் போது பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையிரை கூடுதலாக அமர்த்துதல், பார்வையாளர்களை முறையாக சோதனைக்கு உட்படுத்தல் மற்றும் பார்வையாளர்,
மதுபோதையில் செல்லுதல் மற்றும் மதுபானங்களை எடுத்துசெல்வதை தடுப்பதற்கு கூடுதலான நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago