2025 மே 15, வியாழக்கிழமை

ஹக்கீமின் மஹியாவை அலுவலகம் மீது தாக்குதல்

George   / 2015 ஜூலை 22 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

கண்டி, கட்டுகஸ்தோட்டை மஹியாவை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார காரியாலயத்தின் மீது நேற்றிரவு இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த காரியாலயத்தின் பதாதைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு வரை யாரையும் கைது செய்யவில்லை என பொலிஸ் ஊடகபேச்சாளர் நிலையம் தமிழ்மிரருக்கு தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும்  அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .