2025 மே 14, புதன்கிழமை

கோட்டாபயவின் காலத்து வாகன விவரங்களை சமர்ப்பிக்கவும்: ரணில்

Thipaan   / 2015 ஜூலை 23 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் இலங்கை இராணுவம் பெற்றுக்கொண்ட வெள்ளை வான் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பிலான அறிக்கையை சம்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

இந்த விவரங்களை இராணுவத் தளபதியிடமே அவர் கோரியுள்ளார்.  இந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை இரகசிய அறிக்கையாக சமர்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

மிரஹானவில் சிவில் உடையுடன், ஆயுதத்துடன் கைப்பற்றப்பட்ட வெள்ளை வான், விவகாரத்தையடுத்தே பிரதமர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியுள்ளார். எனினும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் அந்தப்பிரிவு முழுமையாக மூடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ காலத்தில் பாதுகாப்பு உபாயத்தின் அடிப்படியில் பதிவு செய்யப்படாத சிறிய ரக வாகனங்கள் இராணுவத்தின் உயர்மட்டத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் சமாதான அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .