2025 மே 15, வியாழக்கிழமை

'அதிகாரத்தை நாம் கைப்பற்றினால், நாட்டின் பெயரை மாற்றுவோம்'

Gavitha   / 2015 ஜூலை 23 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டின் அதிகார பலத்தை எதிர்வரும் 10 வருடங்களுக்குள் பொது ஜன முன்னணி கைப்பற்றும் என்று தெரிவித்த அக்கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அதன் பின்னர் இந்த நாட்டின் பெயரை மாற்றுவோம் என்றும் குறிப்பிட்டார்.

பொது ஜன முன்னணியினால் கொழும்பில் நேற்று புதன்கிழமை (22) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஞானசார தேரர், 'அதிகாரத்தில் இருக்கும் போது சூரையாடப்பட்ட பணத்தை சிலர் தற்போது செலவளித்து வருகின்றனர். மேலும் சிலர், புதிதாக சூரையாடத் தொடங்கியுள்ளனர்' என்றார்.

'சிறிகொத்தாவில் மின்சாரக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் இருந்தவர்கள், இன்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் பணத்தைச் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர்' என்று ஞானசார தேரர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .