2025 மே 15, வியாழக்கிழமை

ஹெரோய்னை மறைத்து வைத்திருந்த இருவர் கைது

Gavitha   / 2015 ஜூலை 23 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிசை, படோவிட்ட பகுதியில் ஹெரோய்னை மறைத்து வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை கைது செய்ததாக, பொலிஸார் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து 2 கிராமும் 250 மில்லிகிராம் நிறை கொண்ட ஹெரோய்னையும் மற்றையவரிடமிருந்து 700 கிராம் 100 மில்லிகிராம் நிறை கொண்ட ஹெரோய்னையும் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கிசை பொலிஸாரினால் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, இந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்ததாக குறித்த பிரிவு மேலும் தெரிவித்தது.

கைது செய்யப்பட்டோரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .