2025 மே 15, வியாழக்கிழமை

ஐ.ம.சு.கூ.வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Gavitha   / 2015 ஜூலை 23 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை தேர்தல் பிரசாரங்களுக்காக பாவித்து, அதற்கான கட்டணங்களை செலுத்தாததன் காரணத்தினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 

கடந்த தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியமைக்கு, சுமார் 142 மில்லியன் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் குருநாகல் மாவட்ட தேர்தல் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 7,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 52 முறைப்பாடுகளை அரசாங்கம் விசாரணை செய்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .