2025 மே 14, புதன்கிழமை

இராணுவ இலக்க வாகனத்தில் ஐ.ம.சு.கூ.வின் சுவரொட்டிகள்

Gavitha   / 2015 ஜூலை 24 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரின் பெயர் மற்றும் இலக்கத்துடன் ஒரு தொகை தேர்தல் சுவரொட்டிகளை போலியான இராணுவ இலக்கத்தை கொண்ட கெப்ரக வாகனத்தில் எடுத்துசென்ற இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

கெப்பத்திகொல்லாவ எட்டபகஸ்கட என்னுமிடத்தில் வைத்தே இவ்விரும் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சாரதி, கஹட்டகஸ்திகிலியவை வசிப்பிடமாக கொண்டவர் என்றும் உதவியாளர் மதவாச்சியை வசிப்பிடமாக கொண்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .