Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kanagaraj / 2015 ஜூலை 24 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடத்தவிருந்த தேர்தலையே இடைநிறுத்துவதற்கான உத்தரவை தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினருக்கு பிறப்பிக்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
'எங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி' என்ற கட்சியே மேற்கண்ட ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டணங்கள் இன்றி தள்ளுபடி செய்தது.
இந்த மனுவின் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதனை மறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வேட்பு மனுவை சட்டரீதியிலேயே மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டியது.
நாடாளுமன்ற தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 15(3)ஆம் பிரிவின் பிரகாரம் மனுதார் கட்சியானது சட்டத்தின் பிரகாரம் வேட்பு மனுவை பூரணப்படுத்தவில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித்த மலல்கொடவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. மனுவில், தேர்தல்கள் ஆணையாளர், யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி, சட்டமா அதிபர் உள்ளிட்ட 24 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago