2025 மே 15, வியாழக்கிழமை

தலைகீழாக நின்றாலும் மஹிந்தவுக்கு பிரதமராக முடியாது: ரணில்

Kanagaraj   / 2015 ஜூலை 25 , மு.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சால்வையை கீழே போட்டு தலைகீழாக நின்றாலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராகமுடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஹதரலியத்தையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்;. 

அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், 

மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்சித்தலைவர்களே ஆதரவளிக்கவில்லை, இவ்வாறான நிலையில் மக்கள் தொடர்பில் அவர் என்ன சொல்லி என்ன பிரயோசனம். 

மஹிந்த ராஜபக்ஷ ஓடமுடியாத ஓட்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றார். அவருக்கு வாக்களிப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்பதனை மக்கள் நன்கு புரிந்துவைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார். 

தேர்தல் பிரசாங்களுக்கு சென்று மஹிந்த ராஜபக்ஷ அலைச்சல் படுவதை விடவும் வீட்டில் இருந்தால் அவருக்கு நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .