2025 மே 15, வியாழக்கிழமை

டொக்டர் ஷமீர திலங்கவுக்கு, எஸ்.டி.எப் பாதுகாப்பு

Gavitha   / 2015 ஜூலை 26 , பி.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் சபையின் தலைவர் டொக்டர் ஷமீர திலங்க சமரசிங்கவுக்கு, விசேட அதிரடிப்படை (எஸ்.டி.எப்) பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.  

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 'இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துக்குகொண்டு செல்வேன். அதன் பிரகாரம் டொக்டர் ஷமீர திலங்க சமரசிங்கவுக்கு, இன்று திங்கட்கிழமை முதல் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படும்' என்றார்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் தொடர்பில் அம்பலப்படுத்தியமையை அடுத்து, டொக்டர் சமரசிங்கவுக்கு  மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .