2025 மே 15, வியாழக்கிழமை

மேலதிக பிரசார காரியாலயங்களுக்கு ஆப்பு

Gavitha   / 2015 ஜூலை 27 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலுக்காக நிறுவப்பட்டுள்ள தேர்தல் பிரசார காரியாலயங்களை வரையறை செய்வது தொடர்பில், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, தமது மாவட்டங்களில் உள்ள மேலதிக பிரசார காரியாலயங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பாக அகற்றுமாறும் அதன் பின்னர், மேலதிக பிரசாரகாரியாலயங்கள் ஊடாக பிரசார பணிகளை முன்னெடுக்க தடை விதிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

வேட்பாளர்கள் ஒரே ஒரு தேர்தல் பிரசார காரியாலயத்தில் மாத்திரம் இலத்திரனியல் திரையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியும். எனினும், அதற்கான அனுமதி இரவு 10 மணி வரை மாத்திரமே வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வேட்பாளர்கள் தமது வீடுகளுக்கு முன்னால் அமைத்துள்ள தேர்தல் பிரசார காரியாலயங்களுக்கு மேலதிகமாக, பிரசாரகாரியாலயமொன்றை அமைப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

அண்மையில் கட்சித் தலைவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அவர் இதற்கு அனுமதியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .