2025 மே 15, வியாழக்கிழமை

மலையக போஸ்டரில் 'தலை' மாற்றம்

Gavitha   / 2015 ஜூலை 27 , மு.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்ற எஸ்.சதாசிவம் வெளியிட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகள், மக்களை பிழையாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கைத் தொழிலாளார் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஹட்டன் பொலிஸிலும்; தேர்தல்கள் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக  இ.தொ.கா.வின் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

'இ.தொ.கா.வின் சுவரொட்டிகளில் முத்துசிவலிங்கம், ஆறுமுகன் தொண்டமான், அனுஷியா சிவராஜா ஆகியோரின் புகைப்படங்களும் விருப்பு வாக்கு இலக்கங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால், ஐ.ம.சு.கூ சார்பில் போட்டியிடும் எஸ்.சதாசிவம் - இ.தொ.கா.வின் சுவரொட்டிகளில் அனுஷியா சிவராஜின் புகைப்படத்தை நீக்கிவிட்டு தனது புகைப்படத்தை இணைத்துள்ளார்.

இச்செயல், சட்டத்துக்கு புறம்பானது என்பதுடன் மக்களைப் பிழையாக வழிநடத்துவதாக உள்ளது. கட்சி உறுப்பினர்களின் புகைப்படத்தை நீக்கி, தனது புகைப்படத்தை இணைத்து வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு சதாசிவம் முயற்சிக்கின்றார்' என முத்துசிவலிங்கம் மேலும் கூறினார்.

இது தொடர்பில் வினவுவதற்கு வேட்பாளர் எஸ்.சதாசிவத்துடன் தொடர்பு கொள்வதற்கு முயற்சித்த போதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .