2025 மே 15, வியாழக்கிழமை

'உக்குவா' கொலை; சந்தேகநபர் சிக்கினார்

Administrator   / 2015 ஜூலை 28 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கல்லை பள்ளிக்குடா பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்தவர் என கூறப்படும் இந்திக பிரசன்ன அல்லது உக்குவா என்று அழைக்கப்படும் நபர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பான விசாரணைகனை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த மோட்டார் சைக்கிள். பத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் நபருடையது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள், கொழும்பிலுள்ள வர்த்தகருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர், வர்த்தகரிடமிருந்து இந்த மோட்டார் சைக்கிளை வாடகைக்கு வாங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .