2025 மே 15, வியாழக்கிழமை

அரச பகுப்பாய்வுக்கு வழங்கப்பட்ட ஹெரோயின் மாயம்

Gavitha   / 2015 ஜூலை 30 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்படும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு பதிலாக வேறு பதார்த்தங்கள் கலக்கப்படுவது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டு 7 வருடங்கள் ஆகியும் இதுவரையில் அவ்வாலோசனை கிடைக்கப்பெறவில்லை என இரகசியப் பொலிஸார் நேற்று புதன்கிழமை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில், அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போதே இரகசிய பொலிஸார், மேற்கண்டவாறு கூறினர்.

எனவே, இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள கால அவகாசம் கோரியதை அடுத்து, இவ்வழக்கை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .