2025 மே 15, வியாழக்கிழமை

முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது: ருவன்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலைகொண்டுள்ள முப்படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவ்வாறானதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். 

இதேவேளை, நாட்டுக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சியினரால் வழமையாக முன்னெடுக்கப்படும் பொய்ப் பிரசாரங்களைக் கேட்டு பொதுமக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜயவர்தன, படையினரின் நலனுக்காக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .