2025 மே 15, வியாழக்கிழமை

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப்பணி இன்று ஆரம்பம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கொழும்பு - கண்டிக்கான நெடுஞ்சாலையின் கட்டுமானப்பணிகள், இன்று திங்கட்கிழமை (03), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக,  வீதி அபிவிருத்தி அதிகார  சபையின் பணிப்பாளர் சமன் பண்டார தெரிவித்தார். 

இதன் முதலாம்கட்டப் பணியாக, கடவத்தையிலிருந்து மீரிகமை வரையிலான அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து மீரிகமை-குருநாகல், குருநாகல்-கண்டி என்று இந்த கட்டுமானப்பணிகள் தொடரும் என்றும் குருநாகலில் இருந்து தம்புளை வரையிலான நெடுஞ்சாலையும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .