2025 மே 15, வியாழக்கிழமை

மைத்திரி அறிவித்தால் விவாதத்துக்கு நான் தயார்: ரணில்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோல்விக்கு பின்னரான வாக்குறுதிகள் அர்த்தமில்லாத சூன்யம்
'ஐக்கிய இலங்கை' என்பது 'ஒரு ஐக்கியப்பட்ட இலங்கையாகும்'
ஐக்கிய, ஒற்றையாட்சிக்குள் இடையில்லை வேறுபாடு இல்லை
ஐ.தே.க.வே 'ஒரே மாற்று தேர்வு' 'ஒரே வேலைத்திட்டம்'
பேச்சுவார்த்தையின் ஊடான தீர்வுக்கு இடையூறுகள்; இல்லை


 'மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் வேட்பாளர் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதே கூறிவிட்டார் என்று கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ என்று ஜனாதிபதி அறிவிப்பாராயின் பகிரங்க விவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கு தான் தயார்' என்றும் அவர் கூறியுள்ளார்.

'ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் இல்லாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேரடி விவாதம் நடத்துவதற்கு தான் தயாரில்லை என்று விவாதத்துக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை' என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாடுகள் சிதறிவிட்டன என்பதனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை தன்னால் பெற்றுக்கொள்ள முடியும்' என்றும்  அவர் கூறினார்.

'ஒரே மாற்று தேர்வு' மற்றும் 'ஒரே வேலைத்திட்டம்' ஐக்கிய தேசியக் கட்சியிடம் மட்டுமே இருக்கின்றது. ஆகையால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியடையும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் வெற்றியடைந்தால் முன்னெடுக்கப்போவதாக கூறப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 'எதிர்கால சான்றிதழ்' எனும் வேலைத்திட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், 20 வருடங்கள் ஆட்சியில் இருந்த கூட்டமைப்பு மீண்டும் வாக்குறுதிகளை வழங்குவது அர்த்தமில்லாத சூன்யமாகும் என்றார்.

'தோல்வியடைந்ததன் பின்னர் மீண்டும் வாக்குறுதிகளை வழங்குவதில் அர்த்தமில்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்தலின் ஊடாவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று ஆரம்பத்திலிருந்து இருந்த ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை ஐக்கிய இலங்கைக்குள் என்று மாறிக்கொண்டது ஏன்? இனவாதத்துக்குள் நுழையாமல் இம்முறை தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்றதனாலா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'ஐக்கிய இலங்கை' என்றால்  'ஒரு ஐக்கியப்பட்ட இலங்கையாகும்' என்றார்.

'நாங்கள் அதிலிருந்து தூர விலகியிருக்கவில்லை. ஐக்கிய, ஒற்றையாட்சிக்குள் இடையில்லை வேறுபாடு இல்லை. ஆங்கிலத்தில் ரnவைநனஇ ரnவைல ஆகியவற்றுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. சிங்களத்தில் அவ்வாறில்லை. ஐக்கியப்படுத்தல் என்பது சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் செயற்பாடாகும்.  அரசியல் செயற்பாடாகும்,  கலாசார செயற்பாடாகும். ஒற்றையாட்சி என்பது அதில் செயற்படுத்தும் செயற்பாடாகும்' என்றும் அவர் தெரிவித்தார்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்துகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி கோரிக்கையை முன்வைத்திருப்பதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு காண்பதற்கு எந்த இடையூறுகளும் இல்லை என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .