Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு பொதுமக்களின் உயிரை பறித்த கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்துள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (நஐதேமு)கண்டித்துள்ளதுடன், தேர்தல் பிரசாரத்தின்போது எந்தவொரு வேட்பாளரும் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புகளை கொண்டிருக்ககூடாது என்றும் தெரிவித்துள்ளது.
எந்தவொரு வேட்பாளராவது பாதாள உலகக்கோஷ்டியினரின் உதவியைப் பெற்றால், அந்நடவடிக்கை முழுமையாக கண்டிப்படக்கூடியது என நஐதேமு களுத்துறை மாவட்ட வேட்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கே தெரிவித்தார்.
பாதாள உலகக்கோஷ்டியினர் தொடர்புபட்டிருக்கும் சம்பவங்களுக்கு எதிராக கடினமான சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்திய அவர், கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதாள உலகக்கோஷ்டியினர் தொடர்பு பட்டிருந்தாலோ இல்லையோ இது ஒரு துயரமான சம்பவம் என அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.
இருந்தபோதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியில் செயலற்று இருந்த பாதாள உலகக் கோஷ்டி தற்போதுதான் வெளிப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்தார்.
கடந்த அரசாங்கம் பாதாள உலகக் கோஷ்டியினருக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்தை வழங்கி அவர்களை அரசியல் தலைவர்களாகியதாகவும், அதனாலேயே பாதாள உலகக் கோஷ்டி செயலற்ற நிலைமையில் இருந்தது போன்று காணப்படதாகவும், ஆனால் தெளிவாக அப்பிடியே இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago