2025 மே 15, வியாழக்கிழமை

ராஜபக்ஷ குடும்பத்தையே சிறையில் அடைத்திருக்க முடியும்: ரணில்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜபக்ஷவின் ஆட்சியில் போல மக்களுக்கு நாங்கள்  தண்டனை வழங்கமாட்டோம். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நடந்ததைபோல நாம் இருந்திருந்தால் ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்களையே சிறையில் அடைத்திருக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிபிசி சிங்கள சேவைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாம், சட்டத்தின் பிரகாரமே நடப்போம். இவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு நான் கொண்டுவந்திருந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் பிழைகளை செய்யவில்லை என்பது விசாரணை குழுவினால் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆளுநரின் மருமகனுக்கு நேரடியாகத் தொடர்புடைய நிறுவனமான பேர்பேச்சுவல் ட்ரெஸறீஸ் தனியார் நிறுவனம், மத்திய வங்கியிடமிருந்து எவ்வாறு பணம் பெற்றுகொள்ள முடியும் என்பது தொடர்பிலும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
ஏவ்வாறாயினும் பேர்பேச்சுவல் ட்ரெஸறீஸ் தனியார்  நிறுவனத்தின் பணிப்பாளர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நிவாட் கப்ராலின் சகோதரி என்று தெரியவந்திருப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .