Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடியத் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசுக்கும் பன்னாட்டுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தங்கள் தலைமை என்பதை உறுதிபடக் கூறியுள்ளனர். நீண்டகாலத் தமிழர் சிக்கல்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இது தெளிவுபடுத்துகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நீண்ட காலமாக இணைந்து செயற்படும் அமைப்பாகக் கனடியத் தமிழர் பேரவை இருந்து வருகிறது. இந்த வகையில் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதில் பன்னாட்டுக் குழுமம் குறிப்பாக இந்தியா முழுமையான உதவிகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.
இலங்கை மக்கள் மீண்டுமொரு முறை நல்ல மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர். இது இவ்வாண்டு ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலுடன் தொடங்கியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஆகியோரை வாழ்த்துவதோடு கடந்த எட்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் முன்னேற்றப் பணிகளைத் தொடரவேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.
எப்போதும் போல் கனடியத் தமிழர் பேரவை, தமிழ் மக்களின் விருப்புகளை ஏற்றுக்கொள்வதோடு அவற்றுக்கு மதிப்பளிப்பளிக்கிறது. தமிழ் மக்கள் மதிப்போடும் அமைதியோடும் சமாதானத்தோடும் சம உரிமையோடும் வாழும் நிலையை உருவாக்குவதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அதன் தலைவர் இரா. சம்பந்தனதும் நெடும் பயணத்துக்கு கனடியத் தமிழர் பேரவை தோள் கொடுத்து நிற்கிறது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
6 hours ago