2025 மே 16, வெள்ளிக்கிழமை

இலங்கையுடன் என்றும் நல்லுறவு: பிரான்ஸ் அரசாங்கம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் அதிகளவு வாக்குகளை பெற்று, நடுநிலைமையுடன் நடைபெற்ற இலங்கையின்  பொதுத்தேர்தலை வரவேற்பதாக, பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு, இந்த வாக்கெடுப்பு ஒரு கட்டமாக அமைந்தது  என்றும் சமூகங்களுக்கிடையிலான சமரசத்துக்கும் மனித உரிமைகளுக்களுக்கு பாதுகாப்பளிப்பதற்குமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு இந்த தேர்தல் உதவியாக அமைந்துள்ளதாகவும் பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள அதிகாரிகள் மற்றும் மக்களுடன் பிரான்ஸ் அரசாங்கம் எப்போதும் ஒன்றுபட்டு நிற்கும் என்றும் இலங்கையுடன் ஒரு நல்லுறவை பேணும் என்றும் பிரான்ஸ் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .