2025 மே 17, சனிக்கிழமை

ஐ.ம.சு.கூ.வின் தேசியப்பட்டியல் விவரம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது.தேர்தலுக்கு முன்னர் கையளிக்கப்பட்ட தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த பலரின் பெயர்கள் புதிய பட்டியலில் உள்ளக்கப்படவில்லை.

கலாநிதி சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித்த விஜயமுனி சொய்சா, எஸ்.பீ.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,  திலங்க சுமத்திபால, அங்கஜன் ராமநாதன், எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லா, மலின் ஜயதிலக்க, பைசர் முஸ்தபா மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரின் பெயர்களே தேசியப்பட்டியல் எம்.பி.க்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் டியூ குணசேகர, திஸ்ஸ வித்தாரண, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, ரெஜினோல்ட் குரே, ஸ்ரீ ரங்கா, பிரபா கணேசன் மற்றும் டிரான் அலஸ் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .