2025 மே 17, சனிக்கிழமை

விரும்பினால் அரசாங்கத்தில் இருக்கலாம்: சு.க உறுப்பினர்கள் ஜனாதிபதி ஆலோசனை

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட விரும்புகின்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமுடியும் என்றும், விருப்பம் இல்லாதவர்கள் கும்பலாக இருந்து உள்நோக்கத்துடன் செயற்படவேண்டாம் என்றும் அவ்வாறானவர்கள் எதிர்க்கட்சியில் இருந்து செயற்படமுடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கும் மற்றொரு பிரிவினர் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படுவதற்கு கலந்துரையாடிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .