2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டத்தரணிக்கு வாள் வெட்டு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பை சமரசம் செய்வதற்கு சென்ற சட்டத்தரணியின் மீது வாள்வெட்டும், குண்டாந்தடி தாக்குதலும் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சட்டத்தரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கொழும்பு-கண்டி வீதியில் பிலிமத்தலாவை நகரத்துக்கு அண்மையில், அதாவது பண்டரெல்தெனியவில்  வைத்து பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரண்டு குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.

அதனை தடுத்துநிறுத்தி, இருக்குழுவினரையும் சமரசம் செய்வதற்கு சென்றுள்ளார். இதன்போதே, அவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் வசந்த குமார உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, அன்றையதினம் அப்பெண்ணை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X