2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரபாகரனுக்கு உதவியோர் தப்பிக்கவே முடியாது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணித்துவிட்டாலும் அவருக்கும், அவ்வியக்கத்தின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மன் ஆகியோருக்கு நிதி உதவியளித்தோர், ஆயுதங்களை வழங்கியோர், வாகனங்களை கொடுத்தோர் மற்றும் ஆலோசனை வழங்கியோர் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் கட்சி காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பான சட்டம், இரண்டாவது உலக மகா யுத்தத்துக்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது. என்றாலும் மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம், கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை கையளித்தது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X