Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க உட்பட நால்வரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை அழைப்பாணை விடுத்துள்ளது.
காலி மாவட்டத்தின் ஐந்து பேர் தாக்கல் செய்த மனுவின் பிரகாரம் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரட்டை குடியுரிமை பெற்ற எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது எனவே, அவருடைய நாடாளுமன்ற உறுப்புரிமையினை இரத்து செய்யுமாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கீதா குமாரசிங்கவுக்கு இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
3 hours ago