2025 மே 19, திங்கட்கிழமை

'மனித உரிமை பிரச்சினைகள் அரசியல் ஆயுதமாம்'

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமைகள் பிரச்சினையை அரசியல் நோக்கங்களுக்காக அரசியல் ஆயுதமாக தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்கங்கள் பயன்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த அரசாங்கம் தம்பட்டம் அடிப்பது போல கடந்தவாரம் இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றும் பெரிய வெற்றியல்ல என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறினார்.

நீர்த்துப் போனதாக கூறப்படினும் இந்தத் தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் வெளித் தலையீடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது என அவர் கூறினார்.

'நாம் ஏற்கக்கூடிய வாசகங்களும் இதில் உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக இந்தத் தீர்மானத்தை ஏற்பது நாட்டுக்கு ஆபத்தை கொண்டுவரலாம்' என  அவர் கூறினார்.

ஐ.நா.வும் சில வல்லரசுகளும் தமது தேவைக்காக இலங்கையைப் பயன்படுத்த முயல்வதாக ஜே.வி.பி கருகின்றது.

வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளூடாக மனித உரிமைகள் பாதுகாவலன் போல பேசுகின்றது என ஜே.வி.பி பொதுச் செயலாளர் கூறினார்.

13ஆவது திருத்தத்தினூடாகவும் வேறுவழிகளிலும் யுத்தத்தின் பின்னரான பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதாக ஐ.நா. மற்றும் இந்தியாவுடன் தனியாக கூட்டறிக்கை விடுத்ததன் மூலம் இலங்கைப்பிரச்சினையை சர்வதேசமயப்படுத்திவிட்டதாக முன்னைய அரசாங்கத்தை ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X