2025 மே 19, திங்கட்கிழமை

சேயா விவகாரம்: இருவர் குறித்து இடைக்கால அறிக்கை

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட 5வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலை தொடர்பிலான விசாரணைகளில், கொட்டதெனிய பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 7ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட 17 வயதான மாணவன் மற்றும் 33 வயதான நபர் ஆகிய இருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த சிறுமி கொலை வழக்கில், 17 வயதான மாணவனை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்குமளவுக்கு போதுமான சாட்சியங்கள் கொட்டதெனிய பொலிஸாருக்கு இருந்ததா என்பது குறித்தே இந்த விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், கைதான பின்னர் சிறுவன் உள்ளிட்ட இருவரும் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட விடயம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X