2025 மே 19, திங்கட்கிழமை

வைட்டிடம் விசாரணை

Gavitha   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், மருத்துவர் எலியந்த வைட்டின் வதிவிடம் பயன்படுத்தப்பட்டது தொடர்பில் அவரை நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவின் பொலிஸார் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.

பிரபலமானவர்களுக்கு மட்டும் ஆன்மீக சிகிச்சை அளிக்கும் வைட், மூலிகைகளையும் பயன்படுத்துபவர் ஆவார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மருத்துவராக இவர் கருதப்படுகிறார்.

வைத்தியர் வைட்டை இலங்கையின் அதிசய மருத்துவர் என சச்சின் குறிப்பிட்டிருந்த போதிலும், அவர் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர், லசித் மலிங்க, கௌதம் காம்பீர், ஆஷிஷ் நெகாரா உட்பட பல கிரிக்கெட் வீரர்களைத் தான் குணப்படுத்தியிருந்ததாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X