2025 மே 19, திங்கட்கிழமை

பாரம்பரியங்களை பாதுகாக்க அமெரிக்கா நிதியுதவி

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கலாசார மற்றும் மத பாரம்பரியங்களை பாதுகாக்கும் தொடர்ச்;சியான முயற்சிகளின் ஒரு அங்கமாக, புராதன பௌத்த ரஜகல மடாலயத்தை மீளமைத்தல் மற்றும் அநுராதபுர தொல்பொருள் அருங்காட்சியகத்தின் புராதன தொல்பொருட்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 300,000 அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாயில் 42.1 மில்லியனுக்கும் அதிகம்) நன்கொடையாக வழங்குவதாக அமெரிக்கத் தூதரகம அறிவித்துள்ளது.   

'இலங்கையின் மத மற்றும் கலாசார பாரம்பரிய பகுதிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா அறிந்து வைத்துள்ளது. 2005ஆம் ஆண்டு முதல் இதற்காக 100 மில்லியன் இலங்கை ரூபாயை வழங்கியுள்ளது' என  அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கலாசார பராம்பரிய தலங்களை பாதுகாப்பதற்கான எமது ஒத்துழைப்பானது, சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுலாத்துறைக்கான ஊக்கத்தை வழங்கவும், மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை உருவாக்கவும் உதவும் என நம்புகின்றோம் ' என அவர் மேலும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X