2025 மே 19, திங்கட்கிழமை

அலுகோசு பதவி: செவ்வாய் நேர்முகத் தேர்வு

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக அலுகோசு பதவிக்கு இருவரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு ஒக்டோபர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார, நேற்று செவ்வாய்க்கிழமை (06) தெரிவித்துள்ளார்.

இரு பதவி வெற்றிடங்களுக்காக 24 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடிப்படை தகுதியாக விண்ணப்பதாரி, தரம் 8 பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். ஐந்து அடி நான்கு அங்குலம் உயரத்தைக் கொண்டிருப்பதோடு அரசாங்க வைத்திய நிபுணரால் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனையில் சித்தியடையவேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் அலுகோசு பதவிக்கு சிலர் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் சேவையை விட்டுச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X