Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடக ஒடுக்குமுறையை நிறுத்து, ஜனநாயகத்தை பாதுகாப்போம் எனக் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் மூலம் அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (06) தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், மனுதார்களுக்கு தலா 25,000 ரூபாய் நட்டஈட்டை செலுத்துமாறும் பொலிஸ் மாஅதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், சிசிர டி ஆப்று, சுனில் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமே இந்த மனுவை விசாரணை செய்திருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்ததன் பின்னர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி குறித்து இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நாட்டிலுள்ள பிரபல ஊடக நிறுவனமொன்றுக்கு தீ வைக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்த கைது இடம்பெற்றதாகவும், நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
7 hours ago
7 hours ago
18 May 2025