Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராஜாங்க அமைச்சரான ரோஸி சேனாநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் நேற்று வியாழக்கிழமை ஆராயப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகியோர் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தனக்கு கிடைத்த விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ரோஸி சேனாநாயக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக மனுதாரர் நம்பிக்கை கொண்டிருப்பதாக, அவரது சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட சகல வாக்குகளையும் எண்ணுவதன் மூலம் தமது நம்பிக்கையை உறுதிசெய்வதே, தனது கட்சிக்காரரின் தேவையாகும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்தார்.
இதன்போது தேர்தல்கள் ஆணையாளர் சார்பாக பிரசன்னமாகிய பிரதி சொலிஸ்டர் நாயகம் நேரியன் பிள்ளை, அந்த மனு தொடர்பான அறிவித்தலை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
இதன் பிரகாரம் தேர்தல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பிரதிவாதிகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025